வருமான வரித்துறையின் புதிய மைல்கல்லாக 2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.
கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அப்போது, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு டிசம்பர் 31- ஆம் தேதி வரை தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் இதுவரை இல்லாத அளவாக 8 கோடி பேரைத் தாண்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் அதிகளவாக ஒரே நாளில் அதாவது ஜூலை 31- ஆம் தேதி மட்டும் 64.33 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?
வருமான வரிக்கணக்கு தாக்கல் படிவங்களை தணிக்கை செய்வதற்கான கால அளவு 10 நாட்களாகக் குறைக்கப்பட்டது. வருமான வரிக்கணக்கு தாக்கல் தொடர்பாக, 50 கோடி இ-மெயில்களும், 51 கோடி குறுந்தகவல்களும் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.