Homeசெய்திகள்இந்தியாபழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

-

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பின்னர் 2024ல் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதற்கு முன், 3 நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுக்கும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் இடையே பல வித வாக்குவாதங்களும் பேச்சுவார்த்தைகளு நடந்துவருகின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போல, கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் பாதித்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான பங்களிப்பை ஊழியரிடமிருந்து பெற வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

ஆந்திர பிரதேசத்தில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சினை ஏற்கனவே அரசாங்கத்திற்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் (PFRDA) இடையே விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தீர்வு, தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதாகும். என்பிஎஸ் -இல் உள்ள புகார் என்னவென்றால், பணியாளரின் பங்களிப்பு இதில் ஒரே நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

ஆனால் வாரிய அனுமதி நிலுவையில் உள்ளது. இதில் குறைந்தபட்ச வருமானம் 4 முதல் 5 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது மிகவும் குறைந்த அளவாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

உத்தரவாத தொகையால் செலவு அதிகரிக்கும். சந்தை மூலம் சிறந்த வருமானம் கிடைத்தால், ஓய்வூதியம் குறைந்தபட்ச வருமானத்தை விட 2-3% அதிகமாக கிடைக்கும். இது தவிர, தற்போதுள்ள என்பிஎஸ்ஸில்(NPS) முதிர்வுத் தொகையில் 60 சதவீதம் ஊழியருக்குச் செல்கிறது. இந்தப் பணத்தையும் ஓய்வூதியத்துக்குப் பயன்படுத்தினால், ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்.

மூன்றாவது தீர்வு, அடல் பென்ஷன் யோஜனா போல, குறைந்தபட்ச ஓய்வூதியம் அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாகும். PFRDA தற்போது இந்த திட்டத்தை நடத்தி வருகிறது.

இதில் பங்களிப்பின் அடிப்படையில் ரூபாய் 1000 முதல் ரூ 5000 வரை ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கத்தை அனைவருக்கும் விரிவுபடுத்தவும், ரூபாய். 5000 என்ற வரம்பை நீக்கவும் PFRDA தயாராக இருக்கலாம். உத்தரவாதத்தொகையில் ஏதேனும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், உதவி வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

மூன்று நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்வது பிஎஃபார்டிஏ -வின் பொறுப்பாகும். ஆனால் தற்போது அதன் புதிய தலைவரின் நியமனம் இன்னும் நடக்காமல் இருப்பது ஒரு சிக்கலாக உள்ளது. இந்த அமைப்பின் முன்னாள் தலைவரின் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. புதிய தலைவரை நியமித்த பின் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 5 மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் முடிவை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, ​​டிஏ-வும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ