Homeசெய்திகள்இந்தியா"சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்"- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

“சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்”- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

-

 

"சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தாரக மந்திரம்"- சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!
Photo: DD

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “30 வயதிற்கு குறைவான இளைஞர்களின் ஜனத்தொகை உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. தற்போது நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ கிடையாது. இந்திய இளைஞர்கள் தான் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்திச் செல்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய உலகமே விரும்புகிறது. தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. இந்தியா தனது எதிர்க்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் திறனை தற்போது பெற்றுள்ளது. கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு உலக அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டனர். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா நவீனத்துவத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியா தான் தற்போது காரணமாக இருக்கிறது. இந்தியா இந்த பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசுத் தேவைப்படுகிறது.

2014, 2019- ல் வலுவான பெரும்பான்மைக்கு கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்ததால் சீர்த்திருத்தங்களை செய்ய முடிந்தது. சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய தாரக மந்திரத்தை வைத்து இந்தியா செயல்பட்டு வருகிறது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு மாற்றங்களை கொண்டு வந்துக் கொடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நாங்கள் நீக்கியுள்ளோம்.

“மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ