Homeசெய்திகள்இந்தியா'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

-

 

'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!
Photo: Sharad Pawar

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!

‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சரத்பவார், கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாகவும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் காரணமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜியால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனையை தொடங்கியுள்ளதாகவும், விரைந்து இதில் முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், எந்த நெறியாளர் தொகுத்து வழங்கும் ஊடக விவாதங்களில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்; பங்கேற்க கூடாது என்பதை இந்தியா கூட்டணியின் ஊடகப் பிரிவினர் முடிவுச் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவுச் செய்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பா.ஜ.க. அரசின் ஊழல் ஆகிய பிரச்சனைகளை முன் வைத்து வரும் அக்டோபர் மாதம் வாரம் மத்திய பிரதேசம், போபாலில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

MUST READ