Homeசெய்திகள்இந்தியாஇந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!

இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!

-

 

இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!
File Photo

கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுச் செய்யப்பட்டது.

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்

இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் அளவிலான 19ஆவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்லைக்கோடு பிரச்சனை தொடர்பாக, இரு தரப்பும் ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளின் தலைமை அளித்த அறிவுரைப்படி, இருதரப்பும் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துக் கொண்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை இரண்டு நாட்களாக நடைபெற்றது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 13, ஆகஸ்ட் 14 ஆம் தேதிகளில் நடைபெற்றது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணும் வரை எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ