Homeசெய்திகள்இந்தியா'இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!'

‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’

-

 

'இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!'

ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்; ஏதேனும் பயணத் திட்டம் இருந்தால் அதனை ரத்துச் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், இஸ்ரேல், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனே அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தை அணுகுமாறும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இஸ்ரேல் மீது ஈரான் நாடு தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டின் குடிமக்களுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

MUST READ