Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!

இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!

-

 

இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!
File Photo

இந்தியாவில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!

கருங்கடல் வழியாக உணவுப்பொருட்களை ஏற்றுமதிச் செய்ய உக்ரைனுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளதால், இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கோதுமையின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் வறட்சியான காலநிலைக் காரணமாக, சோயா உற்பத்திக் குறைந்திருப்பதால், சோயா எண்ணெய்யின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திச் செய்ய இந்தியா சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில், கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்யும் தானிய ஒப்பந்தத்தை கடந்த ஜூலை 17- ஆம் தேதி ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

இதன் காரணமாக, உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

MUST READ