இந்தியாவில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! மீண்டும் ஊரடங்கா?
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,334 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 28,303 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.75 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,85,858 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.39% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.02% இதுவரை மொத்தம் 92.25 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,533 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.