Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது

-

இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 8 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 4.42% ஐ எட்டியுள்ளது. அடுத்த 10-12 நாட்களுக்கு பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் அதன் பிறகு அவை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாக உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் XBB.1.16 திரிபு தற்போது இப்போது அதிகமாக பரவிவருகிறது.

XBB.1.16 இன் பாதிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் 21.6 சதவீதத்தில் இருந்து மார்ச் மாதத்தில் 35.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இறப்புகள் குறைவாகவே உள்ளன. நாடு முழுவதும் தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் ஆக்ஸிஜன் படுக்கைகளும், 90,785 ஐசியூ படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,998 ஆக அதிகரித்துள்ளது.

MUST READ