உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கவும், தீபாவளி பண்டிகையில் கலந்து கொள்ளவும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது, தொழில்நுட்பங்களைப் பகிர்வது என அப்போது உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஓராண்டில் இருவரும் ஆறாவது முறையாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் உறுதியளித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உறவைக் கெடுக்க வைக்கும், எந்தவொரு செயலையும் ஏற்க முடியாது. இந்தியாவில் இந்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதனை காண ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவுக்கு வருகைத் தர வேண்டும். அப்போது, இந்தியாவில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படும் எனபதால், அதில் கலந்து கொள்ள வேண்டும்” என்றும் அழைத்து விடுத்தார்.
சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
அதைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ், “பெங்களூருவில் ஆஸ்திரேலியா நாட்டிற்கான துணை தூதரகம் அமைக்கப்படும். ஆஸ்திரேலியா வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் உள்ளிட்டவற்றுடன் இணைக்க உதவும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்நாட்டு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.