ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்திப்பு! – ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வினேஷ் போகத் போட்டியிடலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்கும் நிலையில் நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அவரது சொந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை வினேஷ் போகத் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
ராகுல் காந்தி ஜம்மு & காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக அவரது இல்லத்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் & பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளனர்.
சந்திப்பு குறித்தான புகைப்படத்தையும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று காங்கிரஸ் கட்சி வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.