இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.
நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் புகாருக்குள்ளானவருமான பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, சஞ்சய் சிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்திருந்தார். அதேபோல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வெளியே வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.
ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!
இந்த சூழலில், இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.