Homeசெய்திகள்இந்தியா'தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை' என அறிவிப்பு!

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

-

- Advertisement -

 

'தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை' என அறிவிப்பு!
File photo

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

கொரோனாவுக்கு பிறகான நாட்களில் அந்நிய செலாவணியை ஈட்ட பல நாடுகள் சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தாய்லாந்து செல்லும் இந்தியர்கள், 30 நாட்கள் விசாயின்றி, தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முன்னதாக, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை என இலங்கை அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது; இந்த நடைமுறை வரும் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ