மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த கடல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 17 ஆயிரத்து 840 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது. இந்த பாலத்திற்கு அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்கிறார். அங்கிருந்து நாசிக் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள 27வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து மும்பை செல்லும் பிரதமர் மோடி அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அந்த பாலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து நவி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவடைந்த பல்வேறு பணிகளை திறந்து வைக்கிறார்.