
இண்டிகோ விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்கவுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இண்டிகோ விமான நிறுவனம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சின், திருவனந்தபுரம், ஜம்மு- காஷ்மீர், அமிர்தசரஸ், பெங்களூரூ, புவனேஷ்வர், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
ஏர் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக, அதிகளவில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கி வரும் நிறுவனம் என்றால், அது இண்டிகோ விமான நிறுவனம் மட்டுமே. இந்த நிலையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் வாங்க உள்ளது.
வர்த்தக விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு நிறுவனம், ஒரே நேரத்தில் இவ்வளவு விமானங்களை வாங்க முனைவது, இதுவே முதல்முறை. ஏர் இந்தியா நிறுவனம் இதற்கு முன் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
4.50 லட்சம் கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கவுள்ள 500 விமானங்களுடன் சேர்த்து அவர்களிடம் உள்ள ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை, 1,330 ஆக உயரும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள், அதிக அளவில் புதிய விமானங்களை வாங்குவது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியைக் குறிப்பதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.