Homeசெய்திகள்இந்தியாவிமானியைத் தாக்கிய பயணி கைது!

விமானியைத் தாக்கிய பயணி கைது!

-

 

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!
Photo: Indigo Airlines

கடந்த ஜனவரி 14- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய விமானம், கடுமையான பனிமூட்டம் காரணமாக 13 மணி நேரம் தாமதமானதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த விமானியை பயணி ஒருவர் சரமாரியாகத் தாக்கினார்.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஷாலின் அடுத்த படம்…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குறிப்பாக, விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டு கொண்டிருந்த விமானியைப் பயணித் தாக்கினார். அதைத் தொடர்ந்து, சக பயணிகளும், விமான நிலைய ஊழியர்களுடன் பயணிகள் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமானம் புறப்பட தாமதமானால், உடனுக்குடன் வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை ரத்துச் செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், அது குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்த புதிய நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

MUST READ