Homeசெய்திகள்இந்தியா"நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி"- ராகுல் காந்தி உருக்கம்!

“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!

-

 

"நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி"- ராகுல் காந்தி உருக்கம்!
Photo: Congress Rahul Gandhi

இந்தியாவிற்காக இந்திரா காந்தி தன் நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், அவர் கட்டிக்காத்த நாட்டை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்திரா காந்தி, கடந்த 1984- ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த போது, இதேநாளில் தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். அதன் நினைவு நாள் இன்று (அக்.31) நாடெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் பதிவு ஒற்றையிட்டுள்ளார். இந்திரா காந்தியின் நினைவுகள் என்றும் தன் நெஞ்சை விட்டு நீங்காதவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டைக் கட்டிக்காக்க இந்திரா காந்தி ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளதாகவும், அப்படிப்பட்ட நாட்டைப் பாதுகாக்க தான் உறுதியாக இருப்பதாகவும், இந்திரா காந்தி தான் என் பலம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மற்றொரு பேரனும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான வருண் காந்தி, தனது பாட்டி குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்திரா காந்தி தான் இந்தியாவின் தாய் என்று வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

MUST READ