Homeசெய்திகள்இந்தியாஒரு ஏழைப்பெண் அழகாக இருக்கக்கூடாதா..? கும்பமேளாவில் வைரலானதால் முடங்கிய கண்ணழகி'யின் தொழில்..!

ஒரு ஏழைப்பெண் அழகாக இருக்கக்கூடாதா..? கும்பமேளாவில் வைரலானதால் முடங்கிய கண்ணழகி’யின் தொழில்..!

-

- Advertisement -
kadalkanni

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இந்தூரில் வசிக்கும் மோனலிசாவின் பழுப்பு நிற கண்களும், அழகும் வைரலானது. இப்போது இதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

மோனாலிசா கார்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் இங்கு வசிக்கிறது. மோனலிசாவின் குடும்பம் சுமார் 35 முதல் 40 ஆண்டுகளாக மகேஷ்வரில் வசித்து வருகிறது. மோனலிசாவின் குடும்பத்தினர் மகேஷ்வரில் பாசி, மாலை விற்பனையாளர்களாக வேலை செய்கிறார்கள். மகேஷ்வரில் வசிக்கும் அவரது தாத்தா லட்சுமணன், மோனலிசாவின் கண்கள், அழகு காரணமாக பிரயாக்ராஜில் பிரபலமானதைப் போலவே, எங்களது குடும்பமும் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதுவே தொழிலை பெரிதும் பாதிக்கிறது என வருத்தப்படுகிறார்.

மோனலிசாவின் தாத்தா கூறுகையில், ”எங்களது குடும்பம் மாலைகளை விற்று பணம் சம்பாதிக்கிறது. மோனலிசா பிரபலமானதிலிருந்து, அவரால் வேலை செய்யமுடியவில்லை.எங்களால் இப்போது பொருட்களை விற்க முடியவில்லை.மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பேட்டி எடுக்கிறார்கள். அதனால்தான் மோனாலிசா இப்போது வீடு திரும்ப விரும்புகிறார்.

மோனலிசா தன் குடும்பத்துடன் பிரயாக்ராஜுக்கு வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்தார். ஆனால் மோனலிசாவின் புகழால், அவரது முழு தொழிலும் நின்றுவிட்டது. மோனலிசா தொடர்ந்து எனக்கு செய்தி அனுப்பி வருகிறார்.மகேஷ்வருக்குத் திரும்பி வருவது பற்றிப் பேசுகிறார். ஆனால் நானும், எனது முழு குடும்பத்தினரும் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பொருட்களை விற்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தோம்.

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் விற்க லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முத்து நெக்லஸ்கள், பூஜை பொருட்களையும் வாங்கியிருந்தோம். நாங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும், அதை எங்கள் உறவினர்கள் சிலரின் உதவியுடனும், சிலவற்றை கடனாகவும் வாங்கினோம். ஆனால் மோனலிசாவின் புகழின் காரணமாக, இப்போது வாங்கப்பட்ட பொருட்கள் விற்பனையாகவில்லை. நாங்கள் வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று கவலைப்படுகிறோம்.

குடும்பத்தில் யாராவது பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவுக்கு அந்தப் பொருட்களை விற்கச் சென்றால், அங்கேயும் மக்கள் அவர்களை தொல்லை செய்கிறார்கள். இதனால்,மோனலிசாவும் அவளுடைய தந்தையும் திரும்பி வருவது பற்றிப் பேசுகிறார்கள்” என வேதனையுடன் கூறுகிறார்.

ஒரு ஏழைப்பெண் அழகாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா..?

MUST READ