கட்டு கட்டாக பணம் பொதுவெளியில் மறைத்து வைப்பதாகவும் யார் வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளும்படி வீடியோ வெளியிட்ட யூடியூபரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
இணையத்தில் எப்படியாவது பிரபலமாக வேண்டும், சமூக ஊடகங்களில் அதிக அளவில் பாலோவர்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் வித்தியாசமான செயல்களை செய்து வருகின்றனர். ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது, வித்தியாசமான உணவுகளை சாப்பிடுவது, ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக உடை அணிந்து வீடியோ எடுத்து பதிவிடுவது என பிரபலம் அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர், சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் பொது வெளியில் கட்டு கட்டாக பணத்தை வீசி சென்று யார் வேண்டுமென்றாலும் பணத்தை தேடி எடுத்து கொள்ளும்படி அவற்றை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் சமூக வளைத்தளங்களில் இதுபோன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களுக்கு ஆசையூட்டும் விதத்தில் வீடியோ பதிவு செய்து தொந்தரவு ஏற்படுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அது காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை அதிரடியாக கைது செய்து சிறைக்கு அனுப்பினர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் – கைது