Homeசெய்திகள்இந்தியாதென்மேற்கு பருவமழை தீவிரம் - அணையின் நீர் வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு

-

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.தென்மேற்கு பருவமழை தீவிரம் அணையின் நீர் வரத்து அதிகரிப்புகர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக துவங்கியுள்ளது குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 2,241 கன அடியாக இருந்த நிலையில் இன்று அனைத்து நீர்வரத்து 3856 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அணையின் நீர் வரத்து அதிகரிப்புமறுபுறம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வரும் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று 6000 கன அடியாக இருந்த நிலையில் இன்று 16,977 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஒரே நாளில் கபினி ஆணையில் நீர் இருப்பு 3 அடி அதிகரித்துள்ளது. நேற்று கபினி அணையின் நீர் இருப்பு 2266.27 ( கடல் மட்டத்திலிருந்து) அடியாக இருந்த நிலையில் இன்று நீர் இருப்பின் அளவு 2269.22 கன அடியாக அதிகரித்துள்ளது.

MUST READ