Homeசெய்திகள்இந்தியா'இடைக்கால பட்ஜெட் 2024'- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

‘இடைக்கால பட்ஜெட் 2024’- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

-

 

'இடைக்கால பட்ஜெட் 2024'- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துப் பெற்றார்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் ஆறாவது பட்ஜெட் இதுவாகும்.

இந்த நிலையில், டிஜிட்டல் பட்ஜெட் மற்றும் மத்திய நிதித்துறை அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அத்துடன், குடியரசுத் தலைவருடன் குழுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்தை அளித்தார்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

மத்திய பா.ஜ.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ