Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

-

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. 18 மாதங்களாக வன்முறை தொடரும் நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பாட்டார். இதனை தொடர்ந்து, சுராசந்த்பூரில் நடைபெற்ற வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

manipur

வன்முறையை கட்டுப்படுத்தகோரி பெண்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.இந்த சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் பதற்றம் நிலவி வருகிறது. முன்னெச்சரிகை நடவடிக்கையாக அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இம்பால் கிழக்கு, மேற்கு, தவுபால உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

manipur

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை இணையதள சேவை முழுமையாக துண்டித்து, மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரின் அமைதி சீர்குலைவதை தடுக்கும் வகையில் இணைய சேவைகள் தற்காலிகத் தடை சட்டத்தின்படி, இணைய சேவைகள், செல்போன் சேவைகள் உள்ளிட்டவை இன்று மாலை 3 மணி முதல் செப்டம்பர் 15 மாலை 3 மணி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ