திருப்பதி கூட்ட நெரிசல் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகளை ஆய்வின்போது கடுமையாக கடிந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு.
திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெருபவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மதியம் திருப்பதிக்கு வந்தார். முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று கள ஆய்வு செய்த முதல் சந்திரபாபு நாயுடு பின்னர் மருத்துவமனைக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு வந்த முதல்வர் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என்பது முதல் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் பற்றி எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும் அப்போது அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் விசாரித்தார்.
விசாரணையில் தேவஸ்தான அதிகாரிகள் அறங்காவலர் குழு தலைவர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட போலீஸ் எஸ் பி இருந்த நிலையில் அதிகாரிகள் சிலர் சம்பந்தம் இல்லாத வகையிலும் பொறுப்பில்லாத வகையிலும் பதில் அளித்த நிலையில் அவர்களை முதல்வர் கடுமையாக கடிந்து கொண்டார். முன்னதாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஐந்து பேர் இறந்த பைராகிபட்டிடா பூங்காவில் ஆய்வு செய்த முதல்வர் அப்போது பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள், அந்த முடிவுகளை அமலுக்கு கொண்டு வந்த விதம், அதனை கீழ் நிலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்றியதில் ஏற்பட்ட குறைபாடுகள் ஆகிய அனைத்தையும் முதல்வர் முழுவதுமாக கேட்டறிந்தார்.
அப்போது முதல்வர் கேட்ட பல கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க இயலாமல் தினறி ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி கொண்டனர் இந்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன் கேட்டை திறந்து விட்ட போலீஸ் டிஎஸ்பி ரமணகுமாரை விசாரணைக்கு ஆஜராக போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.