இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலில் இருந்து மூன்றாவது சிறப்பு விமானம் மூலம் மேலும் 197 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே ரத்து!
இஸ்ரேல்- ஹமாஸ் போர் காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து, ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலமாக இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 447 பேர் இந்தியா திரும்பினர். இதில் சுமார் 50 பேர் தமிழர்கள் ஆவர். இந்த நிலையில், மூன்றாவது சிறப்பு விமானத்தில் 197 பேரும், நான்காவது சிறப்பு விமானத்தில் 274 பேரும் டெல்லி வந்தடைந்தனர்.
தாயகம் திரும்பியவர்களுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கவுசன் கிஷோர் உற்சாக வரவேற்பு அளித்தார். 18,000- க்கும் அதிகமான இந்தியர்கள் இஸ்ரேலில் இருக்கும் நிலையில், தற்போது வரை 918 பேர் மீட்கப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.