
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியும் நிலையில், மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரேல் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுடன் தோளோடு தோள் நிற்கிறது இந்தியா. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கவலைக் கொள்வதாகவும், பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!
இஸ்ரேல் நாட்டின் சுமார் 5,000- க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.