Homeசெய்திகள்இந்தியாஇன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

-

 

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட்!
Photo: ISRO

இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.

“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்தியாவில் கடந்த 1999- ஆம் ஆண்டு முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக கடற்பரப்பு, வான்பரப்பு என தனித்தனியே நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,முந்தைய வழிகாட்டி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் தற்போது என்.வி.எஸ். 01 எனப்படும் இரண்டாம் தலைமுறை நேவிகேஷன் செயற்கைக்கோள் இன்று (மே 29) காலை 10.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்12 (GSLV- F12) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட ஆறாவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இதுவாகும். அதன் மூலம் ஏவப்படும் என்.வி.எஸ். 01 செயற்கைக்கோளை 36,000 கி.மீ. தொலைவில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் மூன்று மணி நேரத்தில் நிலைநிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2,232 கிலோ எடைக்கொண்ட இந்த செயற்கைக்கோளில், இரண்டு சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் மூலம், 2.4 கிலோ வாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தி கடல்சார் இருப்பிடம், விவசாய நிலங்களைக் கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, அலைபேசிகளுக்கான நேவிகேஷன் வசதி உள்ளிட்டவற்றைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

இதற்கு முன்பு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு 10 ஆண்டுகள் ஆயுட்காலம் இருந்த நிலையில், இந்த என்.வி.எஸ். 01 (NVS-01) செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே சொந்த நேவிகேஷன் அமைப்புகளைக் கொண்ட நாடுகளாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவும், அந்த பட்டியலில் இணைய உள்ளது.

MUST READ