மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு புஷ்பக் ராக்கெட் சோதனை (RLV-LEX3) மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ஏவுகணை இலக்கை அடந்தவுடன் அங்கு செயற்கைகோளை நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான சோதனையை மேற்கொண்டது. இதன்மூலம் மீண்டும் இந்த ஏவுகணையை விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்த முடியும்.
ஆகையால் இந்த புதிய முயற்சியில் களமிறங்கிய இஸ்ரோ அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிபெற்ற நிலையில் இன்று 3வது கட்ட சோதனை நடைபெற்றது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இன்று காலை 7:10 மணிக்கு 4.5 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இந்திய விமானப்படையின் சின்ஹூக் வகை ஹெலிகாப்டரில் இருந்து கீழே போடப்பட்ட புஷ்பக் விமானம் வெற்றிகரமாக தானியங்கி முறையில் தரையிறங்கியது.
இந்த சோதனை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, மறுபயன்பாட்டு ஏவுகணையான புஷ்பக் விமானம் RLV-LEX3 ஏற்கனவே இரண்டு சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
RLV-LEX3 Video pic.twitter.com/MkYLP4asYY
— ISRO (@isro) June 23, 2024