Homeசெய்திகள்இந்தியாவாக்கு எண்ணிக்கைகளை அறிவிப்பதில் தாமதம்... தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு...

வாக்கு எண்ணிக்கைகளை அறிவிப்பதில் தாமதம்… தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு…

-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும், இந்தியா கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான இடங்களை தக்க வைத்துள்ளன.

இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிக்கிறது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் கடந்த சில மணி நேரங்களாக மந்த நிலையில், தகவல் பதிவேற்றம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், முடிவுகளை தாமதிக்கும்படி உத்தரவு எங்கிருந்து வந்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

MUST READ