Homeசெய்திகள்இந்தியாஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு - குடியரசு தலைவர் இரங்கல்.

ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்.

-

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனி பேருந்து மூலமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷிவ் கோரி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு - குடியரசு தலைவர் இரங்கல்.

அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா எனும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கிய ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள், படுகாயம் அடைந்தவர்களை அக்னூர் உள்ளூர் மருத்துவமனைக்கும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.உடல் நசுங்கி பலர் இறந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/india/up-fire-breaks-out-in-noida-after-ac-explodes/88562

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பயங்கர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு உள்ளூர் மட்டத்தில் அதிகாரிகள் மீட்பு பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ