ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த மாவட்டத்தின் அலன் (Halan) பகுதியில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவத்தினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினரும் பதிலடிக் கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகள் சுட்டதில் மூன்று வீரர்கள் மீது கொண்டு பாய்ந்ததில், அவர்கள் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மூன்று வீரர்களும் பரிதாபமாக வீரமரணமடைந்தனர்.
2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அலன் வனப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க அங்கு கூடுதல் படைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.