Homeசெய்திகள்இந்தியாஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

-

 

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
File Photo

ஜம்மு- காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவு – சசிகலா இரங்கல்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் டோடா மாவட்டத்தில் உள்ள அசார் பகுதியில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிஸ்ட்வாரில் இருந்து ஜம்மு சென்ற அந்த பேருந்தில் 55 பேர் பயணித்துள்ளனர். பேருந்து மலை பகுதியில் இருந்து இறங்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

உடனடியாக மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

MUST READ