Homeசெய்திகள்இந்தியாஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்... இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்… இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

-

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் நேற்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருகட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதியானது.

அதன்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போ ட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் நட்பின் அடிப்படையில் தனித்து
போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

MUST READ