Homeசெய்திகள்இந்தியா"ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

-

 

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!
Photo: ISRO

சூரியனை ஆய்வுச் செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் லெக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி ஜனவரி 07- ஆம் தேதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா விண்கலத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆதித்யா விண்கலத்தை எல்-1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வரும் ஜனவரி 07- ஆம் தேதி லெக்ராக்ஞ்சியன் புள்ளியின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டு, நிலைநிறுத்தப்படும்” என்றார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் மாதம் 02- ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

பல லட்சம் கிலோ மீட்டரைக் கடந்துப் பயணித்து வரும் ஆதித்யா விண்கலத்தை பூமியில் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராக்ஞ்சியன் புள்ளியைச் சுற்றி வரும் பாதையில் நிலை நிறுத்தி சூரியன் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

MUST READ