Homeசெய்திகள்இந்தியாஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!

-

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!
File Photo

வங்கிக்கடன் மோசடி குற்றச்சாட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.

வங்கியில் 538 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (செப்டம்பர் 02) காலை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!

கடும் நஷ்டத்தைச் சந்தித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2021- ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜாலான் கால்ராக் நிறுவனம் வாங்கியுள்ளது.

MUST READ