ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் மற்றும் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் ‘ஜியோ ஏஐ கிளவுட்’ திட்டம் ஆகியவற்றை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசியது,” தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள் என தெரிவித்து 2024 பொதுத் தேர்தல் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்திற்கு அற்புதமான வெற்றியை கொடுத்துள்ளது. இந்த தேர்தல் உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளது என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது. ஒருபுறம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றங்களுடன், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, கணினி, ரோபாட்டிக்ஸ் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றில் நாம் சிறந்த காலங்களில் வாழ்கிறோம் என்றும் ஏ.ஐ.,யின் வளர்ச்சி, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் பேசினார்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக விரைவில் கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவற்றில், ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜியோ டிவியில் 860 சேனல்கள் வரை காணலாம். இதில் இனி 7 நாட்கள் வரையிலான முடிந்த நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
2025 பொங்கல் பரிசுத்தொகுப்பு… கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு!
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் ‘ஜியோ ஏஐ கிளவுட்’ திட்டம் தீபாவளி முதல் துவக்கப்பட உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.