சிறையில் உள்ள தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!
விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், தனது உயிருக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகள் காரணமாக, ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கு எதிராக பல நேரங்களில் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் குறித்து, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள தனது நடவடிக்கைகள் மற்றும் குடும்பத்தாரின் செயல்பாடுகளை சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ கேமரா மூலம் படம் பிடிப்பதாகக் கூறியிருக்கும் சந்திரபாபு நாயுடு, சிறைக்குள் இருக்கும் சிலர் தனக்கு எதிரான நடவடிக்கைகளை கையாளுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை காவல் ஆணையர் பேட்டி!
மேலும், தன்னை கொலைச் செய்ய கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், சிறையில் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கைதுச் செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, ராஜமுந்திரி சிறையில் 43 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.