Homeசெய்திகள்இந்தியாகபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!

-

- Advertisement -

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திர நகரில் போதைப்பொருள் கடத்தியதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.

கபாலி

கைது செய்யப்பட்ட சுங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி கிஸ்மத்பூர் கூட்ரோடு அருகே வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்றபோது கைது செய்ததாக சைபராபாத் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அவரிடம் இருந்து ரூ.2.05 லட்சம் ரொக்கம், 82.75 கிராம் எடையுள்ள 90 சிறிய பாக்கெட்களாக வைத்திருந்த கோகைன் போதை பொருட்கள், 4 செல்போன்கள், ஒரு சொகுசு கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் பிரசாத் மீது என்.டி.பி.எஸ். சட்டம் 1985-இன் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் போனகல் மண்டலத்தை சேர்ந்த சுங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி பி.டெக் மெக்கானிக்கல் முடித்து மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் இயக்குனராக பணிபுரிந்தார். 2016 இல் தனது வேலையை ராஜினாமா செய்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரானார்.

kanja

இவர் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் தயாரித்துள்ளார். அவர் ஓரிரு தெலுங்கு படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். சினிமா தொழிலில் ஈடுப்பட்ட பிரசாத் கோவாவுக்கு சென்று அங்கு ஒரு கிளப்பைத் தொடங்கினார். ஹைதராபாத்தில் இருந்து நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏப்ரல் 2023-ல் மீண்டும் ஹைதராபாத் வந்தார். ஊருக்குத் திரும்பியபோது, ​​நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெட்டிட் எபுஸரிடமிருந்து 100 கோகைன் பாக்கெட்டுகளை வாங்கி ஐதராபாத்தில் விற்க முயன்றார், ஆனால் போலீசாரால் பிடிபட்டார். போலீசார் எபுசர் மீதும் ராய்துர்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MUST READ