Homeசெய்திகள்இந்தியா"கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி"- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

-

 

"கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி"- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், “கடந்த 1974- ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த 1974- ஆம் ஆண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதை கடந்த 1974- ஆம் ஆண்டு ஒப்பந்தம் தடை செய்கிறது. நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.

கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

கச்சத்தீவு தொடர்பாக தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ