Homeசெய்திகள்இந்தியாமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

-

 

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்!

கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டு காலமாக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை அலட்சியமாக விட்டுக் கொடுத்தது என குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது இந்தியர்களை ஆவேசமடையச் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது என கச்சத்தீவு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ஒற்றுமை நலன்களை 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ