விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை காலமானார்
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த 203 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, விபத்தில் உயிரிழந்தார். ஹரியானாவை பூர்வீகமாக கொண்ட இவர், பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகள் இன்ஜினீயரிங் படித்தவர். இதையடுத்து அமெரிக்கா சென்ற கல்பனா சாவ்லா, முதுநிலை படிப்பு படித்து, முனைவர் பட்டமும் பெற்றார்.
இதற்கெல்லாம் கல்பனா சாவ்லாவுக்கு ஆதரவாக இருந்த அவரது தந்தை பனராசிலால் சாவ்லா வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பனராசிலால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கர்னால் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.