Homeசெய்திகள்இந்தியாகார்கில் போர் நினைவு தினம் - தமிழக ஆளுநர் மரியாதை

கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை

-

கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங் பிரார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கார்கில் போர் நினைவு தினம் - தமிழக ஆளுநர் மரியாதை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் எதிர் கொண்டு முறியடித்தனர்.

543 ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து, இந்த வெற்றியை இந்தியாவிற்கு பரிசளித்தனர். பாகிஸ்தான் தரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகியிருந்தனர். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதியை ‘கார்கில் வெற்றி தினம்’ என்று கொண்டாடி வருகிறோம்.

சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தில், போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங் பிரார், முன்னாள் ராணுவ அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

MUST READ