ஜார்ஜரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் சானித்யா என்ற 8 மாதக் குழந்தை, தனது வாயில் மொபைல் சார்ஜரின் பின்னை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் தாலுகாவை சேர்ந்த சந்தோஷ்- சஞ்சனா தம்பதியின் ஒரே குழந்தை சானித்யா. சந்தோஷ் ஹெஸ்கோம் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவருகிறார். குழந்தையின் பெற்றோர், ஸ்விட்ச் ஆப் செய்யாமலே சாக்கெட்டில் போன் சார்ஜரை பொருத்தியிருந்தனர். சார்ஜர் பின்னை தவறுதலாக 8 மாத குழந்தை சானித்யா, வாயில் வைத்ததாக தெரிகிறது.
இதில் அக்குழந்தைக்கு மின்சாரம் தாக்கப்பட்டது. உடனே சானித்யாவை, அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
குழந்தைகள் இருக்கும் பகுதியில் மின்சார பொருட்களை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.