Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

-

- Advertisement -

 

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி!
Photo: ANI

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘சீதாராமம்’ இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் பிரபாஸ்!

காங்கிரஸ் 103 தொகுதிகளிலும், பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், ம.ஜ.க. 22 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டி.கே.சிவக்குமார் மற்றும் சென்னபட்ணா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, வருணா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, சிக்மகளூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.

உண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே… ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 8 பேர் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் உள்ளனர்.

MUST READ