Homeசெய்திகள்இந்தியாநாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

-

- Advertisement -
kadalkanni

 

Photo: CM Siddaramaiah official Twitter Page

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்துவது, மாநில அரசின் நிதி நிலைமை உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை (மே 22) காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 24- ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

கூட்டத்தொடரின் முதல் நாளில் இடைக்காலப் சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.தேஷ்பாண்டே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

MUST READ