Homeசெய்திகள்இந்தியாகர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!

-

- Advertisement -

 

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!
Photo: Siddaramaiah

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று (மே 20) பதவியேற்றுக் கொள்கிறார்.

ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதலமைச்சராக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொள்கிறார். பின்னர், அமைச்சரவையும் பதவியேற்றுக் கொள்கிறது. சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் தினேஷ் குண்டுராவ், ஜெகதீஷ் ஷெட்டர், பரமேஸ்வரா, லக்ஷமண் சவடி, பிரியங் கார்கே உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பாக, காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழா நடைபெறும் இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

MUST READ