Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்....பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!

கர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்….பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!

-

- Advertisement -

 

கர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்....பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!
Photo: Congress Official Twitter Page

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (மே 08) மாலையுடன் நிறைவுப் பெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 10- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வரும் மே 13- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 06.00 மணியுடன் ஓய்கிறது.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Photo: Congress

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பெங்களூருவில் உணவு விநியோகம் செய்யும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்து சென்று வாக்குச் சேகரித்தார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்த அவர், பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பா.ஜ.க. ஆட்சியாளர்களைக் கடுமையாக சாடியுள்ளார்.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!

இன்று (மே 08) பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கன்னிங்காம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்ததுக்கு சென்று அங்கிருந்த பெண்கள் மற்றும் மாணவிகளுடன் உரையாடினார். பின்னர், அவர்களோடு பேருந்தில் ஏறிய ராகுல் காந்தி, மகளிருக்கு இலவச பேருந்து சேவை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் உள்ளிட்டவைக் குறித்து எடுத்துக் கூறினார்.

பேருந்தில் இருந்த பொதுமக்கள் பலரும் ராகுலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

MUST READ