Homeசெய்திகள்இந்தியாபாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம்

பாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம்

-

- Advertisement -

பாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம்

கர்நாடக தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 6 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

celebration

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்

காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 45.4 சதவீதமும், பாஜக 38.2 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. குறிப்பாக கல்யாண் கர்நாடகா, கிட்டூர் கர்நாடகா, மத்திய கர்நாடகா, பழைய மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 116 இடங்களிலும் பாஜக 78 இடங்களில்,மஜத 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

காங்கிரஸ் தொண்டகர்கள் கொண்டாட்டம்

தனிப்பெரும்பான்மையிடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். அதேசமயம் பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட்ன.

MUST READ