Homeசெய்திகள்இந்தியாகர்நாடக தேர்தல்- அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு; ஓபிஎஸ் தரப்பு மனு நிராகரிப்பு

கர்நாடக தேர்தல்- அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு; ஓபிஎஸ் தரப்பு மனு நிராகரிப்பு

-

- Advertisement -

கர்நாடக தேர்தல்- அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு; ஓபிஎஸ் தரப்பு மனு நிராகரிப்பு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளன.

eps ops

கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் ஓபிஎஸ் சார்பில், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட ஆனந்தராஜன் என்பவரும், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட நெடுஞ்செழியன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரின் வேட்புமனுக்களையும் தேர்தல் அலுவலகர்கள் நிராகரித்தன. ஆனந்தராஜின் வேட்புமனுவில் பல்வேறு தவறுகள் இருந்தாலும், நெடுஞ்செழியனின் வேட்புமனுவில் ஒரு ஒரு இடத்தில் கையெழுத்து போட தவறியதாலும் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.

அதேசமயம் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் போட்டியிட இருக்கும் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ