தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்!
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் முன்னிலை
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 79 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம்
பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரபரத் ரெட்டி முன்னிலையில் உள்ளார். சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லக்ஷ்மி அருணா இரண்டாவது இடத்திலும், பெல்லாரி தொகுதியில் பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தொடர்ந்து பின்னரைவை சந்தித்துள்ளார்.
பாஜக அலுவலகம் வெறிச்சோடியது
தேர்தலில் பின்னடைவை சந்திப்பால் கர்நாடக பாஜக அலுவலகம் வெறிச்சோடியது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி நகர் தொகுதியில் பகுபஜன் சமாஜ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூர் மாநகர் சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.