Homeசெய்திகள்இந்தியாகவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

-

 

கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

மதுபானம் உரிமம் பெற ஆம் ஆத்மி கட்சிக்கு ரூபாய் 100 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கவிதாவிடம் விசாரணை நடத்தி டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அனுமதிக் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், அனுமதியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, சி.பி.ஐ. காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கவிதா சார்பில் நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவிஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு கவிதா ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கவிதாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?

நீதிமன்ற உத்தரவை அடுத்து, கவிதா திகார் சிறையில் இருந்து கவிதா விசாரணைக்காக, சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

MUST READ